எப்படி கறியை சமைத்துக்கொண்டே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்ப முடியும்? - கூறுகிறார் “ராக்கெட் பெண்”

/files/detail1.png

எப்படி கறியை சமைத்துக்கொண்டே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்ப முடியும்? - கூறுகிறார் “ராக்கெட் பெண்”

  • 3
  • 0

-  V. கோபி

விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு வழிநடத்துவதோடு காலையும் மாலையும் எட்டு பேருக்கு சமைக்கவும் உங்களால் முடியுமா? தினமும் நீங்கள் காலை 5 மணிக்கு எழுந்து, உங்கள் பெயர் தாக்‌ஷாயினியாகவும் இருந்தால், நிச்சியம் முடியும். 

நான்கு வருடங்களுக்கு முன்பு, இந்திய விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்ததை, சேலை அணிந்த பல பெண்கள் குழுவாக கொண்டாடிய புகைப்படம் ஒன்று, இந்திய விண்வெளி திட்டத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை வெளிச்சம் இட்டு காட்டியது. அந்த புகைப்படத்தில் இருந்தவர்களில் தாக்‌ஷாயினியும் ஒருவர். இவர்கள் “ராக்கெட் பெண்கள்” அல்லது “செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த பெண்கள்” என அழைகப்படுகிறார்கள்.

செயற்கைகோளை கண்காணிப்பதோடு, அது செல்ல வேண்டிய பாதை மற்றும் வழி மாறாமல் இருப்பதை உறுதிசெய்வதும் தாக்‌ஷாயினி தலைமையிலான குழுவின் பணியாகும். இவரோடு உடன் பணியாற்றும் ஒருவர் (இவரும் பெண்மனியே) இப்பணி குறித்து விளக்குகையில், “இந்தியாவில் இருக்கும் கோல்ஃப் பந்தை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குழிக்குள் செலுத்துவதை போன்றது. அதுமட்டுமல்லாமல் இக்குழி தொடர்ந்து நகர்ந்து கோண்டே இருக்கக்கூடியது” என்றார்.

ஏற்கனவே கடினமான இந்த வேலை, இந்திய மனைவிமார்களுக்கு இருக்கும் பொருப்புகளோடு சேர்த்து மேலும் கடினமாக்குகிறது. ஆனால் தாக்‌ஷாயினியின்  தன்னம்பிகையும் மன உறுதியும் இளம் வயதிலேயே வெளிப்பட்டது, “சம்பிரதாயமான, பழமைவாதம் பேனும், வைதீகமான” குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது வாழ்க்கை அறிவியலோடுதான் இருக்க வேண்டும் என தீர்மாணித்தார்.

1960-களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பத்ராவதி என்ற ஊரில் சிறுமியாக வளர்ந்தபோதே, அவரது தந்தை அவருக்குள் இருக்கும் ஆர்வத்தை வளர்த்ததோடு ஊகப்படுத்தவும் செய்தார். அந்த நகரத்தில் இருக்கும் பொறியியல் படித்த ஒரே பெண்மனி, தனது வீட்டைகடக்கும்போதெல்லாம் அவரை காண ஆர்வமாக ஓடியுள்ளார் தாக்‌ஷாயினி.

அப்போதெல்லாம் பெண்களை படிக்க வைக்க முன்னுரிமை அளிக்காததோடு, பலகலைக்கழகம் சென்று படிப்பதெல்லாம் அசாதாரண விஷயம். ஆனால் அவர் தந்தை – சிறந்த கணக்காளர் – படிக்க வைக்க விரும்பினார். பொறியியல் படிப்பில் சேர்ந்து, அந்த வருடத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டவரை, B.Sc படிப்பே போதும் என அவர் தந்தை நினைத்தார். ஆனால் விடாப்பிடியாக முதுகலை படிப்பை முடித்து அதிலும் சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு, கல்லூரியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தாலும், விண்வெளி மீதும் செயற்கைகோள் மீதும் அவரது ஆசை நளுக்கு நாள் வளர்ந்தது. அப்போது ஒரு நாள் இந்திய வின்வெளி நிறுவனமான இஸ்ரோ-விற்கு ஆள் எடுப்பதாக பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்த்ததும் உடனடியாக விண்ணப்பித்து பணியிலும் சேர்ந்தார்.

1984-ம் ஆண்டு சுற்றுப்பாதை இயங்குவியல் பிரிவில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. இன்று இத்துறையில் வல்லுநராக இருந்தாலும், ஆரம்பத்தில் அடிப்படையை புரிந்துகொள்ள கடுமையாக உழைத்துள்ளார். இதோடு சேர்த்து கணினி நிரல் எழுதும் பணியும் இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்சனை. அதாவது, இதற்கு முன் அவர் கணினியை பார்த்ததேயில்லை. அன்றைய நாட்களில் இது அசாதாரன விஷயம் கிடையாது. அப்போதெல்லாம் பலரிடம் கனினி கிடையாது, ஸ்மார்ட்போன், டேப்லெட் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் அவரிடம் புத்தகம் இருந்தது. தினமும் தனது வேலை நேரம் முடிந்த பிறகு, இத்துறையில் அறிவையும் வேகத்தையும் வளர்த்துக்கொள்ள, கணினி நிரல் குறித்த புத்தகங்களை படித்தார். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, தாக்‌ஷாயினிக்கு மற்றொரு வீட்டுவேலையும் செய்ய வேண்டியிருந்தது.

இஸ்ரோ-வில் பணிக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆகியதும், அவரது பெற்றோர்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.மஞ்சுநாத் பசவலிங்கப்பாவோடு தாக்‌ஷாயினிக்கு திருமணம் செய்து வைத்தனர். இதன் காரணமாக வீட்டு வேலையும் இவர் தலை மேல் விழுந்தது. அலுவலகத்தில் செயற்கைகோளை வழிநடத்துவதற்கு சிக்கலான கணக்கீட்டையும் கணினி நிரலையும் எழுதும் தாக்‌ஷாயினி, வீட்டிற்கு வந்ததும் தன் இரண்டு குழந்தைகள், கனவனரின் ஐந்து தம்பிகள் மற்றும் அவரது பெற்றோர்களை கவனிக்க வேண்டியிருந்தது. “எட்டு பேருக்கு சமைக்க வேண்டியிருப்பதால் காலையில் ஐந்து மணிக்கே எழும்ப வேண்டும். இது எளிதான காரியம் இல்லை. பலரும் சப்பாத்தியை சாப்பிடுவதால் அதை தயாரிக்கவே நீண்ட நேரம் ஆகும். குடும்பத்தில் எல்லாருக்கும் சமைத்த பிறகே அலுவலகத்திற்குச் செல்வேன்” என்கிறார்.

அலுவலகத்திற்கு வந்தாலும், வீட்டைப்பற்றி யோசிக்க நேரம் கிடைத்தால், மதிய நேரத்தில் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து குழந்தைகள் பற்றி விசாரித்து கோள்ளும் தாக்‌ஷாயினி, மாலை வீடு திரும்பியதும் மறுபடியும் சமைப்பதே இவரது வேலை.
கடினமானதே என ஒத்துக்கொள்ளும் தாக்‌ஷாயினி, “நான் வேலையை விட்டுவிட வேண்டும் என என்னுடைய உரவினர்கள் கருதுகிறார்கள். எதையும் அவ்வுளவு எளிதில் விடக்கூடிய நபர் அல்ல நான். மேலும், எதிலும் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும் என என் தந்தை கூறியுள்ளார். சிக்கலான தொழில்நுட்ப விஷயங்களில் கூட, எனக்கு எதுவும் புரியவில்லை என்றால், அதை புரிந்துகொள்ளும் வரை வாசித்து கொண்டேயிருப்பேன். சில சமயங்களில் படுப்பதற்கு இரவு ஒன்று அல்லது இரண்டு மணி ஆகிவிடும். ஆனாலும் காலையில் நான்கு மணிகே எழுந்து சமைக்க வேண்டும்” என்கிறார்.

ஆனால் தாக்‌ஷாயினி இதை ஒரு புகாராக கூறவில்லை. தனது அலுவலக வேலையையும் குடும்பத்தையும் எப்படி திறமையாக கையாள்கிறேன், எந்தளவு தனது வேலையை அனுபவிக்கிறேன், எப்படி பிரச்சனைகளை தீர்ப்பதால் சந்தோஷம் உண்டாகிறது என்ற உற்சாகமே அவரது குரலில் உள்ளது. 

கோடிங் எழுதுவதும் சமைப்பதும் ஒன்றுதான் எனக் கூறும் தாக்‌ஷாயினி, சிறிய சிறிய மாற்றங்கள் செய்து அதில் புதிய விஷயங்கள் செய்து பார்ப்பேன். கோடிங் எழுதும்போது சிறு தவறு செய்தாலும் நமக்கு தவறான வேறு எண்களே கிடைக்கும் .அதுபோல, சமையலில் பொருட்களை சேர்ப்பதில் சிறிய மாற்றம் நிகழ்ந்தாலும் சுவையே மாறிவிடும்” என்கிறார்.

இத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்வது பற்றியும், கடினமான நேரங்களில் ஒருவொருக்கொருவர் எப்படி ஆதரவாக இருந்தனர், எப்படி தங்கள் உறவுகளிலும் ஒருவருக்கு இடையேயான மரியாதையும் இத்தனை வருட வாழ்க்கையில் வளர்ந்தது என்பது குறித்து கூறும் தாக்‌ஷாயினி, “ஆரம்ப வருடங்களில், நான் என்ன செய்கிறேன் என்றே என் கனவருக்கு புரியவில்லை. சில சமயங்களில் சனிக்கிழமையும் வேலைக்குச் செல்வேன். எனக்கு கொடுத்த பணியை நான் ஒழுங்காக செய்யாததாலேயே சனிக்கிழமை வேலைக்குச் செல்வதாக என் கனவர் நினைத்து கொண்டிருந்தார். ஆனால் போகப் போக, என் பணி நேரத்தை செயற்கைகோளே தீர்மாணிக்கும், ஆகையால் நாம் விரும்பும் போதெல்லாம் வரமுடியாது என்பதை தெரிந்துகொண்டார்”.
இன்று பசவலிங்கப்பா தன் மனைவி சாதித்த விஷயங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறார். உதாரணத்திற்கு, “செவ்வாய் கிரக திட்டம்” மற்றும் “வின்வெளி மீட்பு திட்டம்” ஆகியவற்றை கூறலாம். பூமிக்கு திரும்பி வரும் விண்கல மேலுறை, வளிமண்டலத்திற்குள் நுழைகையில் எரியாமல் இருப்பதை உறுதி செய்வதும் கடலில் விழுவதை பத்திரமாக மீட்பதுவும் தாக்‌ஷாயினியின் கணக்கீட்டை சார்ந்தே உள்ளது.

தங்களது வாழ்க்கையை பத்துக்கு பத்து என்று அளவிட்டு பசவலிங்கப்பா கூறுவதை கேட்கும் தாக்‌ஷாயினி,  சிரித்தபடியே, நான் 9.5 அளவே வழங்குவேன். ஏனென்றால், வீட்டு வேலையில் எனக்கு ஒருபோதும் என் கனவர் ஒத்தாசை செய்ததில்லை என்கிறார்
நான் மருத்துவராக இருப்பதால், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது. எனது மனைவி பெரும்பாலும் அலுவலக நேரம் மட்டுமே வேலை செய்கிறாள்” என்கிறார் பசவலிங்கப்பா. தனது கனவரின் விளக்கம் தாக்‌ஷாயினிக்கு திருப்தி அளிக்கிறது.
வழக்கமாக இந்திய குடும்பங்களில், பல வேலையினை பெண்களே செய்யும் நிலை உள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் இவற்றை எந்த புகாரும் தெரிவிக்காமலேயே பெண்கள் செய்து வருகின்றனர். இதில் தாக்‌ஷாயினியும் விதிவிலக்கல்ல.

வீட்டைப் பொருத்தவரை முன்பு போல் வேலைப் பளு இல்லை. எங்களது மகனும் மகளும் – இருவரும் பொறியியலாளர்கள் – வளர்ந்து பெரியவர்களாகி அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்கள். ஒய்வுக்கு பிறகு என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, முழு ஓய்வு தனது திட்டத்தில் இல்லை என்கிறார் தாக்‌ஷாயினி.

செவ்வாய் கிரகம் பற்றி மேலும் ஆய்வு செய்ய விரும்பும் தாக்‌ஷாயினி, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இருக்கும் ஒற்றுமையும் வேறுபாட்டையும் நம்மிடம் பட்டியலிடுகிறார். செவ்வாய் கிரகத்தின் மூலம் அறியப்பட்டு இன்று பல இந்தியப் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் நபராக உள்ளவருக்கு, செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து பார்க்க ஆசையாம். அதனாலேயே இவரை அனைவரும் “செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த பெண்” என்கின்றனர்.

நன்றி: bbc

Leave Comments

Comments (0)