DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 18, 2022,11:58:16 AM
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?
செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதோடு சுயாதீன ஊடகவியலாளரான செல்வராசா சுமந்தன் என்பவரது கமெராவை படை அதிகாரி ஒருவர் பறிக்க முற்பட்டுள்ளார்.
சபை கவனத்தை எடுக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை இருக்கும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வழி செய்ய வேண்டும் என மலையக இளைஞர் அமைப்பினால் இந்திய துாதரகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு பயணம் உள்ளார்.
பெப்ரவரி 25ம் நாள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பத்து குழல்களைக்கொண்ட பல்குழல் பீரங்கி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் தீர்மானம்.
மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எத்தகைய தடைகள் வந்தாலும் இலங்கையில் இரு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 300 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துறை சாந்தனுக்கு இந்திய அரசு அவரின் இலக்கிய பணிக்காக சாகித்திய அகடாமி விருது வழங்கி மதிப்பளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் அடிவயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற போது, மருத்துவர் பாலியல் ரீதியில் துன்புரித்தினார் என பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டிருந்தார்.
மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளில் பெரும்பாலானோருக்கு எந்த நோயும் இல்லை என அந்நாட்டுத்தகவல்கள் கூறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்கள் கூட்டணி எந்த அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது என எழுப்பப்பட்ட கேள்விக்கு கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் பதிலளித்துள்ளார்.
தமது ஆட்சியின் போது தேசிய பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டமைக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே காரணம் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித்தலைவருமான மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு நலிவுற்றுள்ள பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து வரும் 14 ம் திகதி 16 குடும்பங்கள் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் இன மத பேதங்கள் அற்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து தரையில் உருண்டு அநுராதபுரம் நோக்கி ஒருவர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் புதியசெயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் தளபதி ரவீந்திர குணவர்த்தன நேற்றுக் காலை முகத்திடலில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் 71வது சுதந்திரம் இன்று சிங்கள மக்களால் கோலாகாலமாகக் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார மேம்பாட்டுச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது.
இலங்கையின் தேசியக் கொடியை இறக்கி விட்டு, கறுப்புக்கொடியை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றியுள்ளனர்.
தமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகளில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் எவரும் எம்முடன் இணைய விரும்பினால் அவர்களை அரவணைக்க நாம் தயார் என்று நான் முன்னர் கூறியதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
கேப்பாப்புலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுட்டு வரும் மக்கள், இலங்கையின் சுதந்திரத்தினத்தை துக்க தினமாக அறிவித்து போராட்டத்தைத்தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.
கடல்சார் மக்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ள கடற்படையினர், அப்பகுதி மக்களை காட்டுப்பகுதிகளில் குடியமர்த்த முனைந்துள்ளது.
இலங்கையின் இராணுவ உயர் அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மொஹமட் அலி என்பவர் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல்.
புதிய அரசமைப்பு பற்றி பேசுவது தெற்கில் உள்ள பௌத்த மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன் மறுபுறத்தில் அது வடக்கு மக்களை ஏமாற்றுவதாகும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது
இலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணபடுகின்றனர் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் காவல்துறையினருக்குத் தகவலை வழங்கியமைக்காக தாக்குதலுக்குள்ளாகிய கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனை அவரது வீட்டில் வைத்து தமிழ் மக்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள கிளிநொச்சியில் பொது நூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் என்பனவற்றை நீண்ட காலமாக அரச படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் வாரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
யாழ்.நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடா்பில் நீதியைவேண்டி நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனா்.
ஈழத்தமிழருக்கு மிகவும் குரல் குடுத்து ஆதரவாக செயற்ப்பட்டு வந்த இந்திய பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் அமரர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மறைவு ஈழத் தமிழர்களை மிகப்பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என M.K சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பானம், கோப்பாய், அச்சுவேலி ஆகிய பகுதிகளில் மீண்டும் இலங்கை காவல்துறையினர் மக்களின் விபரங்கள் தொடர்பில் பதிவு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதைப்போன்று போதைப்பொருள் வியாபாரம் விரைவில் அழிக்கப்பட்டு விடும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இலங்கை அரச படையின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்ற ஆவணங்களை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானஅமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 165 படகுகளில் 48 படகுகள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைபிரட் குஷ் எனப்படும் ஒருவகை கஞ்சா போதைப் பொருளுடன் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாதென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்னாபிரிக்காவின் சுதந்திர தின விழாவை இம்முறை இலங்கையின் யாழ்ப்பான மாவட்டத்தில் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், மிலேச்சத்தனமாக இடம்பெற்றிருந்தன என்று ஐநா விசாரணைக்குழு தெரிவித்திருந்தது.
புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளின் தேவைகளுக்காகவேதான் புதிய அரசமைப்புச்சட்டம் கொண்டுவரப்படுகின்றது என மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை கடலோரக் காவல்படைக்கு Stabicraft என்ற மூன்று அதிவேக படகுகளை ஆஸ்திரேலியா பரிசளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் வாழும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்ற சம்பவங்கள் தினசரி நிகழ்வாக மாறிவிட்டது என பப்புவா நியூகினியின் கத்தோலிக்க மதத்தலைவர்களில் ஒருவரான Giorgio Licini தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலாவின் அனுமதியின்றி இலங்கையில் அமெரிக்க தூதரகம் முகாம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சுமத்தியுள்ளார்.
மனித உரிமை விடையம் குறித்து எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கால அவகாசம் என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 30 வருடத்திற்கும் மேலான நில மீட்பு போர், 2009ம் ஆண்டு இலங்கை அரசின் இனவழிப்பு போருடன் மெளனிக்கப்பட்ட பின், தற்போது புத்த பெருமானின் உருவச்சிலைகளை வைத்து தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
கடந்த ஆக்டோபர் மாதம் முதல் ஜனவரி 20ம் திகதி வரையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வெளிநாட்டுப் பிரஜைகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு தத்துக்கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளமையினால் அது குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா குற்றம்சுமத்தியுள்ளார்.
இலங்கை அரச படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு கோரியும் மன்னார் மனிதப்புதைகுழி விவகாரத்தில் விரைவான நீதி கோரியும் நாளை மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக படைப்புழுத் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவைப் போன்று பதவி மோகம் கொண்டவர் என இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே சாடியுள்ளார்.
மகிந்தவின் மைத்துனர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானிய துாதுவர் ஜேம்ஸ் டெளரிஸ், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இந்த விவகாரம் குறித்து தமது எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை மலையக தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கூட்டுஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு என்ற ஊரில் அரச படையினரின் முகாம்களை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை அந்த ஊரின் மக்கள் முன்னெடுத்தனர்.
இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் 24 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக எதிர்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே அணியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் மூன்றாவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இலங்கையில் புதிதாக அரபுக்கல்லூரிகள் நிறுவப்படுவதைத் தடைசெய்வதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தையும் கண்காணிப்பதற்கும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை கூலித்தொகையை 700 ரூபாயாக அதிகரிக்கும் கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட மூன்று தொழிற்சங்கங்களும் இணக்கியுள்ளன.
இந்த சந்திப்பின்போது பேர்கஸ் ஔல்ட், தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்களுடன் உடன்பட மறுத்த விக்னேஸ்வரன் அவர்களுக்கு தமிழ்மக்களின் நிலைகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பானத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் 83 பேர் இலங்கைக்கு திரும்பச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர், கடந்த 2009ம் ஆண்டு முடிவுறுத்தப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பேணுதல், பொறுப்புகூறல்,மற்றும் மனித உரிமைவிடையங்களை மேம்படுத்துதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முழுமனதுடன் ஏற்றுக்கொண்டது.
இலங்கையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் வடக்கு, கிழக்கில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
இலங்கையில் ஒருமித்த பிரிக்கப்படாத நாட்டிற்குள்ளையே ஒரு தீர்வைத் தேடுவாதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்த வெனிசுவேல ஜனாதிபதி நிகலஸ் மதுரோ, அமெரிக்க இராஜதந்திரிகள் 72 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி முன்னாள் போராளிகள் 16 பேர் அரச படைத்தரப்பால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நாவின் தீர்மானம் மூலமோ அல்லது அழுத்தங்கள் ஊடாகவோ புதிய அரசியல் அமைப்பு உருவாக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி வரும் 2 வாரங்களுக்குள் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாபெரும் நாடு தழுவிய போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சக்கோரிக்கையாளர்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் நடைமுறை நிறுத்தப்படும் என தாய்லாந்து அறிவித்துள்ளது.
இலங்கையில் ஊழல் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் ஹொங்கொங், மலேசியா நாடுகளிடம் இலங்கை அரசு உதவிகோரியுள்ளது.
கடந்த 2017 மார்ச் முதலாம் திகதி முதல் இலங்கை அரச படைகளின் முகாம்களுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டம் ஒன்று அதன் உரிமையாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு விட்டு தாம் மத்திய நிலைக்கு தற்போது வந்திருப்பதாக தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், தனி நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் அமைந்துள்ள நீராவிப்பிட்டி பி்ள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
இலங்கையின் வடக்கில் 16 அகதிகள் முகாம்கள் இன்னும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் தொழில்வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
மிகவும் ஈவிரக்கமற்ற படுகொலைகளில் ஈடுபட்ட 11 படையினரிற்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளதாக என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, உயர்ஸ்தானிகராலயத்திற்கு வௌியில் புலம்பெயர் தமிழ் மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இலங்கையில் வடபகுதியில் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் விவசாய தேவைக்காக நிர் பெறுவதற்க்கு jcp மூலம் துரவு (நீர் பெறும்அகழி) வேட்டியபோது பல மேட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்மாவட்டத்தில் போராட்டம் ஒன்று தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் நோக்கத்திற்காகவே இலங்கைத் தமிழ் அகதிகளை இந்தியாவிலேயே வைத்திருக்க முயற்சிகள் நடப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் ஆஸ்டின் பெர்ண்டோ குற்றம்சாட்டியிருக்கிறார்.
இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள சவக்குழியிலிருந்து 21 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த குழந்தைகள் யாவும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தடயங்களும் உள்ளன.
மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்ய அமெரிக்கா செல்லவுள்ள குழுவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமரின் கொலை சம்பவத்துடன் தொடர்பிருந்ததாகக் கூறி ஜெர்மனியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை எடுத்து வருவதற்காக மீனவர் குழுவொன்று இலங்கைக்குச் சென்றுள்ளது.
மாலைதீவில் இலங்கையர் ஒருவர் கைத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் முறையிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியிலிருந்து மீன்பிடிக்கு கடலுக்கு சென்ற 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரையில் 300 எலும்புக்கூடுக் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள், மனித வியாபாரத்தில் ஈடுபடுமானால், குறித்த நிறுவனங்களின் அனுமதி சான்றுகள் இரத்து செய்யப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, இரா.சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதாக மஹிந்த ஆதரவு தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது.
இந்தியாவில் தங்கியிருக்கும் அனைத்து இலங்கை தமிழ் அகதிகளையும் மீண்டும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த தமிழ்க்குடும்பத்தை, நாடுகடத்த எடுத்துள்ள முடிவை திரும்ப பெற முடியாது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.