மின்சாரமின்றி இயங்கும் வாஷிங் மிஷினை கண்டுபிடித்த 9 வயது மாணவன்.

/files/detail1.png

மின்சாரமின்றி இயங்கும் வாஷிங் மிஷினை கண்டுபிடித்த 9 வயது மாணவன்.

  • 3
  • 0

-தமிழில் V. கோபி 

மின்சாரம் இல்லாமல் வாஷிங் மிஷின் இயங்குவதை எங்காவது பார்த்துள்ளீர்களா? ஆச்சர்யபடாதீர்கள். நம் நாட்டைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளான்.

நாம் 2018ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உலகத்தில் இன்னும் பல லட்சக்கணக்கான மக்கள் மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வசதி இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போதைய மாணவனின் கண்டுபிடிப்பால் பல லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.

alt text

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் சிலிண்டரை சைக்கிளோடு இணைத்து பெடல் மூலம் இயக்குமாறு வாசிங் மிஷின் அமைக்கப்பட்டுள்ளது.
அழுக்கு துணி மூலம் வாஷிங் மிஷின் செயல்படுவதை விளக்கும் மாணவன்.

 

alt textஅழுக்கு துணியை சிலிண்டருக்குள் திணித்து சிறிது நேரம் சைக்கிள் பெடலை இயக்க வேண்டும். முடிவில் உங்களுக்கு சுத்தமான துவைத்த துணி கிடைக்கிறது.

இன்றைய நவீன உலகில் இத்தகைய கண்டுபிடிப்பு படைப்பாற்றல் மிக்கது மட்டுமின்றி மின்சார வசதி இல்லாத பல ஏழை குடும்பத்திற்கு உதவிகரமாகவும் அமையும்.

அர்புதமான விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.

நன்றி  : http://en.goodtimes.my/2018/06/25/this-9-year-old-student-from-india-creates-a-washing-machine-that-does-not-use-electricity-and-it-is-amazing/

Leave Comments

Comments (0)