DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani T
June 27, 2022,2:18:56 AM
தவ.செல்வமணி
இன்று அனைத்து சமூக வலை தளங்களிலும் டார்க் திராவிடியன் - ப்ரவுட் தமிழன் இந்த இரண்டு வார்த்தைகள் தான் பரவலாக பேசப்பட்டு வருகின்றன,அதற்கான காரணம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் கருப்பு நிற உடையணிந்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படியான வாசகத்துடன் யுவன்சங்கர் ராஜா அவர்கள் புகைப்படம் வெளியிட காரணம் என்ன ?
சமீபத்தில் சமூக வலைத்தளம் எங்கும் பெரிய சர்ச்சை வெடித்தது,ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் மோடியும் அம்பேத்கரும் என்கிற பெயரை கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளது,அந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் நரேந்திர மோடி அவர்களை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டும்,இன்று அம்பேத்கர் அவர்கள் உயிருடன் இருந்தால் மோடி அவர்களை பாராட்டி இருப்பார் என்றும் எழுதியுள்ளார் இந்த செய்தி இணையத்தில் பரவிய உடனே.
இளையராஜாவை விமர்சித்து பலர் பல விதமாக எழுத ஆரம்பித்தனர்.
சனாதன இந்துத்துவாவையும் அதன் வர்ண சாஸ்திர சம்பிரதாயங்களையும் அடியோடு அழிக்க போராடிய அண்ணல் அம்பேத்கரும்,சனாதன இந்துத்துவா கோட்பாடுகளை தூக்கி பிடிக்கும் மோடியும் ஒன்றா ?
மதவாதத்திற்கும்,சாதியவாதத்திற்கும் துணைபோகும் ஆர் எஸ் எஸ் மோடியும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்ட சட்டமியற்றிய அண்ணல் அம்பேத்கரும் ஒன்றா?
நாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று எண்ணியவரும்,பெண்கள் கல்வி கற்க சட்டமியற்றியவரும்,அயோத்தியில் இராமர் கோவில் காட்டியவம் ஒன்றா ?
இப்படி பலர் பலவாறு இளையராஜாவை, மோடி அம்பேத்கார் குறித்த ஒப்பீடுக்கு தீவிரமாக விமர்சனம் செய்ய,இன்னொரு புறம் இளையராஜா ரசிகர்கள் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும் எங்கள் ராஜா எப்போதும் எங்களுக்கு ராஜா தான் என்று ஒரு தரப்பினரும்,இன்னொரு தரப்பினர் அவர் தலித் சமூகத்தை சேர்த்தவர் என்பதால் சாதியின் அடிப்படையில் இழிவாக ராஜாவை விமர்சிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஒரு சிலர் இந்த மாதிரியான நேரத்தில் சொன்னால் தான் உண்டு என்பது போல சாதிய வன்மத்துடனும் தான் விமர்சிக்கிறார்கள் ஆனால் பெரும்பான்மையாக சமூக வலைத்தளத்தில்,ராஜாவை விமர்சிப்பவர்கள் கூற்று ,மக்கள் பக்கம் நிர்ப்பவர்களே உண்மையான மக்கள் கலைஞர்கள்,அவர்கள் மதவாதிகளின்,இந்துத்துவா சக்திகளின் பின்னால் நின்றாள் எத்தனை பெரிய படைப்பாளிகளாக இருந்தாலும் அவர்களை புறக்கணிக்க வேண்டியது நமது அடிப்படை கடமையாகும் என்றே கூறுகிறார்கள்.
ஆணவ கொலைகள் நடக்கும் போதும்,அம்பேத்கர் சிலைகள் உடைக்கும் போதும் அண்ணல் அம்பேத்கர் பற்றி பொய் பரப்புரைகள் வெளியாகும் போதும் இவர்கள் என்ன செய்தார்கள் என்று ஒரு புறம் விமர்சனம் வருகிறது.
இவற்றிற்கு குரல் எழுப்பாதது எவ்வளவு பெரிய தவறோ அதை போலத்தான் இளையராஜாவின் இந்த பேச்சை கண்டிக்காதது என்று சமூக வலைத்தளத்தில் பலர் கூறுகிறார்கள்.
தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்த சம்பவம்பற்றி கருத்து தெரிவிக்கையில் அம்பேத்கரும் மோடியும் ஒன்றா ? கண்டிப்பான வார்த்தைகள் தான் வருகிறது அண்ணல் அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்தால் இவர்கள் ஆட்சியிலேயே இருந்திருக்க முடியாது,அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பவுத்தம் மாறிய பின்பு ஒரு ஐந்து வருடம் உயிரோடு இருந்திருந்தாலே நாட்டின் வரலாறு மாறியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த முழு புத்தகத்தையும் நான் படித்து விட்டு தான் எழுதினேன்,என்னுடைய கருத்தில் நான் பின்வாங்க மாட்டேன் என்று ராஜா அவர்கள் தற்போது ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்விற்கு பிறகு தான் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இந்த வாசகத்தையும்,புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்,ஆக இளையராஜா அவர்கள் மதவாதத்தை ஆதரிக்கிறார்,யுவன் சங்கர் ராஜா திராவிட சமத்துவத்தை ஆதரிக்கிறார் என்றும்,யாராக இருந்தாலும் தன்னுடைய அப்பாவாகவே இருந்தாலும் அறத்தின் பக்கம் நிற்பதே சரி என்பதை யுவன் சங்கர் ராஜா நம்மிடையே சொல்கிறார் என்றும் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
எல்லோரையும் விட படைப்பாளிகள்,கலைஞர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பும் கடமையும் உள்ளது அவர்களின் பேச்சு ,எழுத்து பல இலட்ச மக்களை சென்று சேர்கிறது அப்படியானவர்கள் மக்களின் பக்கம் நிற்பதே அறம் அப்படியில்லாம் அவர்கள் அதிகாரத்தின்,சாதியின், மதத்தின் பக்கம் நின்றாள் அவர்கள் படைப்பாளிகளே அல்ல,...என்பது இன்றைய இளைஞர்களின் இணைய குரலாக உள்ளது.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Leave Comments