பல்கலைக்கழகமா ? அல்லது பார்ப்பன கழகமா !

/files/Sized_(1)_copy-2021-08-28-21:30:32.jpg

பல்கலைக்கழகமா ? அல்லது பார்ப்பன கழகமா !

  • 58
  • 0

தவ.செல்வமணி


எந்த ஒரு சடங்கு, சம்பரதாயமாக இருந்தாலும் அது எத்தகைய மூடநம்பிக்கை,பிற்போக்குவாதமாக இருந்தாலும் காலம் காலமாக,பின்பற்றிவரும் நடைமுறை என்று அத்தகைய முறைகளை தற்போதும் பலர் பின்பற்றித்தான் வருகிறார்கள்.


ஆனால் அதை மெத்த படித்தவர்கள் சமூகத்தில் வழிகாட்டியாக விளங்க கூடியவர்கள் செய்வது என்பது மேலும் அவர்களை மட்டுமல்லாது,இந்த சமூகத்தையே பின் நோக்கித்தான் செல்லும்.


ஒருவர் பல கஷ்டங்களை சுமந்து தனது உழைப்பில் கட்டக் கூடிய வீடோ ! அலுவலகமோ! அதற்க்கு கிரஹப்பிரவேசம் என்கிற பெயரில் பார்ப்பனரை வரவைத்து யோகம் வளத்து,பூஜை செய்து பசு மாட்டை உள்ளே எடுத்து வந்து மாட்டு மூத்திரம்  தெளித்து விட்டு போகும் போது பார்ப்பனர் ஒரு ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாயை வாங்கி செல்வார்.எந்த ஒரு உடலுழைப்பும் செய்யாத அந்த பார்ப்பனருக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் !

இந்த யோகம்,மாட்டு மூத்திரத்தை  தெளிப்பது எல்லாம் அறிவியலுக்கு உரியதா!

இந்த கிரகப்பிரவேசத்துக்கு அர்த்தம் என்ன ?


மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."


அதாவது வீடு காட்டும் பணியில் ஈடுபடுபவர்கள்,கீழ் சாதிக்காரர்களாம்,அவர்களால் அவ்வீடு அசுத்தமாகி இருக்குமாம்,அதை சுத்தப்படுத்தவே பார்ப்பனர்களை அழைத்து ,பசு மாட்டை அவ்வீட்டுக்குள் அழைத்து வந்து மாட்டு மூத்திரம் தெளித்து தீட்டு கழிக்கிறார்களாம் !


அதாவது பார்ப்பனர் உழைத்து ஊதியம் பெற சோம்பேறித்தனம் கொண்டு சடங்கு,சம்பிரதாயம்,பூஜை,மந்திரம்,கடவுள் என்கிற கற்பனை கட்டமைப்பை உருவாக்கி மக்களை முட்டாளாக்கி சம்பாரித்து வாழ்வு நடத்துவதற்கான,உழைக்கும் மக்களின் உழைப்பை ஏமாற்றி பிடுங்குவதற்கான வேலையே அன்றி இதை வேறென்ன சொல்ல,இதை நிறுவவே,அவர்களுக்கு சாதகமாக அவர்களே மனு சாஸ்திரம்,வேதம் போன்ற நூல்களையும் எழுதி வைத்து மக்களை சுய சிந்தனை செய்யவிடாமல் அடிமைத்தனமாக நடத்தி வருகிறார்கள்.


இப்படி முற்றிலும் அடிப்படை அறிவியலுக்கு புறம்பாக மூட நம்பிக்கையான இந்த மூட பழக்கம் ஒரு  பல்கலை கழகத்தின் வளாகத்திலேயே நடப்பது மிக இழிவான ஒரு செயல்பாடாக உள்ளது.
(26-08-2021) அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் ,விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வக துறையின் ஆய்வகக் கட்டடம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அத்துறையின் தலைவர் முனைவர் ஸ்ரீதர் முன்னிலையில்,பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.


இந்நிகழ்வில் பார்ப்பனிய பூசகரை வைத்து குறிப்பிட்ட மத சடங்கான கேள்வி நடத்தி,பூசைகள் செய்து அதில் அனைவரையும் பங்கேற்க வைத்துள்ளனர்.


அறிவியலை மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய பேராசிரியர்களே மூட நம்பிக்கையையும்,தீண்டாமையையும் மாணவர்களின் மனதிற்க்கு விதைப்பது எத்தகைய கொடூரம்.


எந்த அரசு அலுவகத்திலும் எவ்வித மத கடவுள்களின் புகைப்படங்களும்,சடங்குகளும் செய்திட கூடாது என்று அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு முதல்வராக இருக்கும் போதே ஆணை பிறப்பித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது மதச்சார்பின்மையையை எடுத்து கூறும் அரசியலமைப்பையும் அவமதிக்கும் செயல் தானே இது.


இப்படியான செயலை முன்னின்று நடத்திய துறை தலைவர் மற்றும் துணை வேந்தர் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.


இது போன்ற மதவாத சடங்குகள் இனி எந்த கல்வி கூடங்களிலும் நடக்கா வண்ணம் கல்வி துறை அமைச்சர்கள் கவனம் செலுத்தி நோக்கிட வேண்டும்.


தமிழ் நாட்டில் உள்ள அணைத்து கல்வி நிலையங்களிலும் மதச்சார்பின்மையை பின்பற்றும் விதமாக எவ்வித மதம் சார்ந்த நிகழ்வுகளும் அற்ற நிலையை தமிழ் நாடு முதல்வர் உறுதி செய்ய வேண்டும்,மதவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்.

Leave Comments

Comments (0)