தமிழ்நாடு வரலாற்றில் மிக முக்கியமான சாதனை !

/files/Sized_(1)_copy-2021-08-28-13:53:06.jpg

தமிழ்நாடு வரலாற்றில் மிக முக்கியமான சாதனை !

  • 10
  • 0

தவ.செல்வமணி


தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ( 27-8-2021) தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்,மேம்படுத்தும் பல திட்டங்களை அறிவித்துள்ளார்,இது இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான சாதனையாகவும்,இதுவரை யாரும் செய்திடாத மிகப்பெரிய முன்னெடுப்பாகவும் அமைந்துள்ளது.எப்படி ஊனமுற்றோர்,விதவை,அரவாணி  என்கிற மனித மனங்களை காயப்படுத்தும் வார்த்தைகளுக்கு மாற்றாக மாற்று திறனாளிகள்,கைம்பெண்,திருநங்கை என்கிற வார்த்தை கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதோ ! அதை போல அகதிகள் என்கிற வார்த்தையும் அறமற்றது தான் ஏதிலிகள் அல்லது புலம் பெயர் மக்கள் என்றே அவர்களை அழைத்திட குறிப்பிட்ட வேண்டும் என்கிற மனித மான்பை காக்கின்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கிறோம்.


இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு மதவாதத்தால்,இனவாதத்தால் காலம் காலமாக பூர்வீகமாக அந்த மண்ணில் வாழ்ந்த தமிழ் மக்களின் அடக்குமுறையை ஏவுவதையும்,வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதையும்,தமிழ் பெண்களை வன்புணர்வு செய்வதும்,தமிழ் நூல்களை தாங்கிய நூலகங்களை எரித்து சாம்பலாக்குவதும் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டே வருகிறது.


அந்த மண்ணிலே பூர்வீகமாக வாழ்ந்த தமிழர்களும்,தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களால் வேலைக்கு இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களும் இலங்கை இராணுவத்திடம் இருந்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு வந்தனர்.


அவர்களையே இலங்கை அகதிகள் என்று குறிப்பிடப்படுகிறது.


ஈழ விடுதலை பேசும் காட்சிகள் கூட இங்குள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமை சென்று பார்வையிடுவது இல்லை,அவர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப் படுவதில்லை,அவர்களுக்காக குரல் எழுப்புவதில்லை.


எல்லாமே வியாபாரமாக்கப்பட்ட நிலையில் இங்குள்ள இலங்கை தமிழர்களை பற்றி பேசுவதினால் அவர்களுக்கு பெரிய அரசியல் ஆதாயம் கிடைப்பதில்லை போல.1983 ஜீலை கலவரத்தில் இருந்தே இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் தமிழ்நாட்டு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்,அப்படி வருபவர்களுக்கு,ரேஷன் கார்ட் கிடையாது,குடியுரிமை கிடையாது,ஏன் இந்திய தமிழர்களாக வேலைக்கு அங்கு போய் திரும்பியவர்களுக்கு கூட இந்திய ஒன்றிய அரசு குடியுரிமை மறுப்பது என்பது அவலத்தின் உச்சம்.


கிட்டத்தட்ட அடிமைகள் போல,அகதிகள் முகாம்களில்,கல்வி இல்லாமல்,வேலை இல்லாமல்,சுதந்திரமாக வாழ குடியுரிமை இல்லாமல் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்து வரும் அம்மக்களுக்கு விடியல் தரும் முன்னெடுப்புகளையே தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்துளார்கள்,இதற்க்கு நிச்சயமாக நெஞ்சார நன்றி சொல்வது கடமையாகும்.


குறிப்பாக பல ஆண்டுகாலமாக இலங்கை தமிழ் மக்களுக்களின் குரலாக ஒலித்த பல்வேறு இயக்கத்தை,கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்வது உரியதாகும்.


இலங்கை எதிரிகளின் இந்திய குடியுரிமையை சாத்தியப்படுத்தவும்,இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்புபவர்களுக்கு,தேவையான ஏற்பாட்டை செய்திட ஒரு பாராளுமன்ற உறுப்பினர்,சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒரு சிறப்பு குழுவை அமைத்தல்.இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்.


தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை ஏதிலி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.


முகாம்களில் வசிக்கும் இலங்கை ஏதிலிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.


இலங்கை தமிழ் எதிரிகளுக்கு வீடு,உட்கட்டமைப்பு,கல்வி,திறன் மேம்பாடு என வாழ்க்கை தரத்தை உயர்த்த 317.45 கோடி நிதி ஒதுக்கீடு.இத்தகைய மனித நேய செயல்பாட்டை முன்னெடுத்த தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை முன்னோடியாக கொண்டு இந்திய ஒன்றிய அரசு இலங்கை மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் இந்தியாவில் வாழ வந்துள்ள ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்கிட வேண்டும்,அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Leave Comments

Comments (0)