வங்கிப் பணிகளில் ஓபிசி, எஸ்சி/எஸ்டி பங்கை கபளீகரம் செய்யும் EWS இடஒதுக்கீடு

/files/4 2020-10-14 13:51:59.jpg

வங்கிப் பணிகளில் ஓபிசி, எஸ்சி/எஸ்டி பங்கை கபளீகரம் செய்யும் EWS இடஒதுக்கீடு

  • 52
  • 0

தமிழில்: V.கோபி


பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் போது, ஏற்கனவே உள்ள இடஒதுகீட்டை இது எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் சமீபத்தில் IBPS தேர்வாணையம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்போ வேறுவிதமாக உள்ளது. அந்த அறிவிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவித இடஓதுக்கீட்டை சேர்த்துக்கொள்ள வசதியாக ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ஒபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு 49.5 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவிகிதமாக அப்படியே உள்ளது. இதுசம்மந்தமாக மும்பையிலுள்ள IBPS அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது அதிகாரிகள் யாரும் கருத்து கூற மறுத்துவிட்டனர். இந்த முடிவிற்கு எந்த சட்ட முக்கியத்துவமும் இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார். 

“The Centre has already issued clear directions to the UPSC. If IBPS cuts the quota of reserved castes to facilitate EWS system, it’s a blatant violation of the Constitution.” By contrast, the SBI, which implemented the EWS quota in recruitment last year, did so without cutting the existing reservations — by only reducing the open category recruitment.        

ஏற்கனவே UPSC-க்கு தெளிவான வழிகாட்டுதலைக் கொடுத்துள்ளது மத்திய அரசு. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வசதியாக பிற சாதிகளுக்கான இடஒதுக்கீடை IBPS குறைத்தால், அது அரசியலமைப்பை மீறிய செயலாகும். இதற்கு மாறாக, கடந்த ஆண்டு ஆட்சேர்ப்பின்போது EWS இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏற்கனவே இருந்த இடஒதுக்கீடை குறைக்காமல் பொதுப்பிரிவினரின் இடத்தை குறைத்தது. 

பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, UCO வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப சமீபத்தில் IBPS விண்ணப்பம் கோரியிருந்தது. முதல்கட்ட தேர்வு அக்டோபர் 3, 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. முதல்கட்ட தேர்வில் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வும் நேர்கானலும் நடைபெறும்.

மொத்தமுள்ள 1417 காலியிடங்களில், வழக்கமாக ஒபிசி-க்கு ஒதுக்கப்படும் 27 சதவிகிதத்திற்குப் பதில் 21 சதவிகிதமும் (300 இடங்கள்), எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 13 (196 இடங்கள்) மற்றும் 6 (89 இடங்கள்) சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவினர்களுக்கு 15 மற்றும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 142 (10 சதவிகித ஒதுக்கீட்டின் படி) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 690 இடங்கள் (50%) பொதுப்பிரிவினருக்கு விடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நான்கு பொதுத்துறை வங்கிகளில் ப்ரொபஷனரி அதிகாரிகள் மற்றும் மேலாண்மை பயிற்சியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்பு நடைபெறுகிறது. EWS இடஒதுக்கீடை செயல்படுத்தினால் சமுதாயத்தில் பின்தங்கியோரின் இடஓதுக்கீட்டை நிச்சியம் அது பாதிக்கும் என செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பியது இப்போது உண்மையாகியுள்ளது என்கிறார் செயற்பாட்டாளரும் சென்னை ஐஐடி-யின் முன்னாஅள் மாணவருமான முரளிதரன்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மத்திய அரசு அவசர கதியில் இடஒதுக்கீடை அமல்படுத்துகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. இத்தேர்வை எழுதியுள்ள தேசிய வங்கியின் ஊழியர் ஒருவர் கூறுகையில், “EWS பிரிவினருக்காக ஒபிசி பிரிவினரிடமிருந்து 6 சதவிகிதமும் எஸ்சி/எஸ்டி பிரிவினரிடமிருந்து 3.5 சதவிகிதமும் பிடுங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்குச் செல்ல வேண்டிய 142 இடங்கள் இப்போது முன்னேறிய வகுப்பினருக்குச் செல்கிறது.”

இது அநீதியானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்னும் பல மாநிலங்கள் EWS சான்றிதழ்களை கொடுக்க ஆரம்பிக்காத நிலையில், EWS விண்ணப்பதாரர்கள் குறைந்த கட் ஆஃப் பெற்று அடுத்தகட்ட தேர்விற்கு தகுதி பெறுகிறார்கள். ஒபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை. EWS இடஒதுக்கீடுக்கு எதிராகவே வழக்கு நிலுவையில் உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் 50 சதவிகித இடஒதுக்கீடை IBPS செயல்படுத்துவதாக வங்கிப் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஆதங்கப்படுகின்றனர். Leave Comments

Comments (0)