இந்தியாவை தாக்கப்போகும் அடுத்த அபாயம் !

/files/india-2021-08-26-21:38:37.jpg

இந்தியாவை தாக்கப்போகும் அடுத்த அபாயம் !

  • 15
  • 0

தவ.செல்வமணி


இந்திய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார் அது தான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது,அந்த திட்டத்தால் பல இலட்சம் பேர் வேலை இழப்பார்கள்,அரசு வேலை என்ற ஒன்றே எதிர்காலத்தில் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்,நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு செல்லும்,இத்தகைய பொருளாதார சீரழிவில் இருந்து இந்த நாடு மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகும் !

அப்படி எந்த திட்டத்தை தான் அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ?(National Monetisation pipeline) தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் இந்திய ஒன்றிய நிதியமைச்சர்,இந்த திட்டத்தின் படி நாட்டின் மிக முக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்கள் முதலீடும் செய்யலாம்,குத்தகைக்கும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ,இதன் மூலம் அரசுக்கு 2025 ஆம் ஆண்டுக்குள்ளாக 6 இலட்சம் கோடி இலாபம் ஈட்டப்படும் என்று கூறியுள்ளார்கள்.


இதன் மூலம் இலாபமே 6 இலட்சம் கோடி வரும் என்று கூறப்படுமேயானால் இந்த திட்டத்தால் தனியார்,கார்ப்பரேட் நிறுவங்களுக்கு எவ்வளவு கோடிகள் இலாபம் வரும் !


கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுக்க மக்களின் வரி பணத்தில் உருவான அரசு நிறுவங்களை தான் விழுங்க 

வேண்டுமா ! அதை இந்த அரசே நடைமுறைப்படுத்த வேண்டுமா!


ஒரு சிறிய எடுத்துக் காட்டு தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவங்களே நாடெங்கும் நிறைந்து இருந்தால் அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா !


கொரோனா என்கிற கொடும் தொற்று நாடு முழுவதும் பரவியது,நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் இருந்ததால் ஓரளவு அப்பிரச்சனை கையாளப்பட்டு இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது,ஒரு வேலை ,நாடு முழுவதும் தனியார் மருத்துவ மனைகள் மட்டும் தான் உள்ளது என்றால் எளிய மக்களின் உழைக்கும் மக்களின் நிலை என்னவாயிருக்கும் யோசித்து பாருங்கள்!


கொரோனா தொற்று வந்த பிறகு மட்டுமல்ல,நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற காலத்திரலிருந்து இத்தகைய பொருளாதார மந்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் அவற்றை தீர்ப்பதற்கு ஏதேனும் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையாவது எடுத்தாரர்களா !என்றால் கேள்விக்குறி தான் ! பொருளாதார சீர்திருத்தம் என்கிற ஒன்றையே மேற்கொள்ளாமல்,3000 கோடியை கொட்டி சர்தார் வல்லபாய் படேல் சிலை கட்டினார்கள்,தற்போது கொரோனா 2 அலை முடிந்த பிறகு உலகமே பொருளாதார சீரழிவை சந்தித்து வரும் நிலையில் புதிய பாராளுமன்றத்தை சென்ரல் விஸ்டா என்கிற பெயரில் கட்டி வருகிறார்கள்,இதுமட்டுமல்லாது சட்ட விரோதமாக பலரை வேவு பார்க்க மோடி அரசு பல கோடிகளை செலவிட்டுள்ளது பெகாஸஸ் என்கிற செயலி மூலமாக மக்கள் செயற்பால்ட்டாளர்களை வேவு பார்த்துள்ளது,இதுமட்டுமல்லாது மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டுமே பல கொடிகளை செலவிட்டுள்ளது,இத்தகைய மோசமான செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டு தற்போது நல்ல முறையில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவங்களை தனியாருக்கு குத்தகை விடப்படும் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலாபமே ஒழிய மக்களுக்கும் அரசின் கஜானாவும் எவ்வித வளர்ச்சியும் அல்ல மாறாக அது வீழ்ச்சியையே கொண்டு செல்லும்.நன்றாக உள்ள பொதுத்துறை நிறுவங்களை மேம்படுத்தாமல் அவற்றை தனியாருக்கு கொடுப்பது என்பது எத்தகைய மக்கள் விரோத செயல், குறிப்பாக ஒன்றை சொன்னால் கடந்த சுதந்திர விழாவில் கூட 100 இலட்சம் கோடியை நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த  வழங்கப்படும் என்று கூறியுள்ளார்,ஆக தனியாருக்கு போகும் நிறுவங்களின் உள்கட்டமைப்பை மேம்பாடுத மக்களின் பணம் இவ்வளவு ஏன் ?


பொதுத்துறை நிறுவங்களின் பங்குகளான,நெடுஞ்சாலை துறை,ரயில்வே,மின் உற்பத்தி,மின் விநியோகம்,சுரங்கம் உள்ளிட்டவை மற்றும் 25 விமான நிலையங்கள் ,40 ரயில்வே நிலையங்கள்,15 ரயில்வே விளையாட்டு அரங்குகள் என இத்தனை அரசு நிறுவங்களிலும் இனி தனியாரின் முதலீடு மற்றும் குத்தகை ஆக இவைகள் இனி தனியார் வசமே இருக்கும்.


இவைகளால் என்னென்ன பிரச்சனைகள் விளையும் எனில் !


இனி அரசு வேலை வாய்ப்பு என்ற ஒன்றே இல்லாமல் போகும்,தனியார் நிறுவங்கள் ஆக மாறுகிற பட்சத்தில் இடஒதுக்கீடு என்கிற முறையே இல்லாமல் போகும்,மீண்டும் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் BC,MBC,SC,ST மக்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாவார்கள்.


ஊழியர்களாக தங்களது உரிமையாக்களை தனியார் நிறுவங்களில் கேள்வி எழுப்ப முடியாது,பணி நேரம் மற்றும் விடுமுறைகளில் ஒரு ஒருங்குமுறை பின்பற்றப்படாது.


ஆக எதிர்காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு இலாபம் வரும் என்கிற உறுதிப்பாடும் நிச்சயம் இல்லை ஆக அந்த 6 இலட்சம் கோடி இலாபம் என்கிற ஒன்று இல்லாமலே போகலாம்.மிக முக்கியான ஒரு விடயம் என்னவென்றால் இந்த நாட்டில் 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு நாளைய வருமானம் 20 ரூபாய் வருமானம் பெற்று வருகிறார்கள் அதே நாட்டில் தான் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வருகிறது.


இத்தகைய முரண்பாட்டுக்கு காரணம்,பொருளாதார சீரழிவுக்கு காரணம் ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் தவறான கொள்கை முடிவுகளே ஆகும்.


தனியாருக்கு அத்தனையையும் தாரைவார்த்து விட்டு ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் கொழிக்க ஒட்டு மொத்த நாட்டையே அடமானம் வைக்கும் பிஜேபி அரசின் தேசிய சொத்துக்கள் பணமாக்கும் திட்டத்தால் ,மக்களுக்கும்,நாட்டிற்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் எண்ணில் அடங்காதவை !

Leave Comments

Comments (0)