DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani T
May 18, 2022,12:13:49 PM
-T.செல்வமணி சமீபகாலமாக பாய்காட் என்கிற வார்த்தையை சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் அதிகமாக நாம் பார்த்திருக்கலாம் அதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ள வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை தான். உலக வரலாற்றில் மக்களுக்காக போராடிய பெரும் தலைவர்கள் அனைவரும் ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் விரோதிகள் என்றே முத்திரை குத்தப்பட்டனர். சாதிக்கு எதிராக, மதத்திற்கு எதிராக, இன, நிறவெறிக்கு எதிராக பேசியவர்களை மக்களை புண்படுத்தி விட்டார்கள் என்று விளித்து பெரும் கூட்டம் ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்கள் கருத்தை தெரிவித்துக் கொண்டே வந்தனர் அதனால்தான் எதிர்கால தலைமுறை சமத்துவ வாழ்வை எட்டிப் பார்க்க முடிந்தது. நான் சொல்வதை மறுப்பதற்கு உனக்கு உரிமை உண்டு ஆனால் என்னை பேசாதே என்று கூறுவதற்கு உரிமையில்லை இவ்வாறு தந்தை பெரியார் கூறுவார் ஆக ஓவியம், புத்தகம், சினிமா என ஒவ்வொரு கலையிலும், எழுத்திலும் பேச்சிலும், சீர்திருத்தம் வெளிப்பட்டது அவர்களை வசைபாடுவதையே வழக்கமாக வைத்துள்ளனர் மத அடிப்படைவாத கும்பல்கள், இது இப்போது அதிகரித்து வருகிறது, அதற்கு மிக முக்கிய காரணம் இன்றைய மதவாத பிஜேபி அரசு. அதன் அரசியல் சுயலாபத்திற்காக, தன் ஓட்டு வங்கியை பெருக்குவதற்கு, அதிகாரத்தை தக்க வைப்பதற்கு அப்பாவி பொதுமக்களிடம் மதவெறியை தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது.. இந்து, இஸ்லாமிய சிறுவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்திய சர்ப் எக்செல் விளம்பரத்தை தடைசெய்ய கூறினார்கள். ZOMOTO உணவகத்தில் வேலை செய்யும் ஒரு இஸ்லாமியர் உணவு கொண்டு வழங்கியதற்கு அந்த உணவை புறக்கணித்து ZOMOTO வை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இப்போது சூட்டபில் பாய் எனும் நெட்ப்ளிக்ஸ் தொடருக்கு பொங்கி எழுந்துள்ளார்கள் இந்த மத காவலர்கள். காதலர்கள் இரண்டு பேர் இந்து கோவிலில் முத்தமிடுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த ஆண் ஒரு முஸ்லிம், அந்தப் பெண் ஒரு இந்து. ஒரு சில வினாடிகளில் இந்த காட்சிகள் வந்து போகிறது, ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் முத்தமிடுவது தேச குற்றமா? என்ன? இது ஒரு மதத்தினரை புண்படுத்துகிறது என்று சொல்லி ஒரு பாஜக மாணவர் சங்கத் தலைவர் தனது மாணவர் சங்க வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நெட்பிளிக்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், காட்சியை நீக்க வேண்டும் எனவும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்தார். மத்திய பிரதேசத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளை எல்லாம் மறந்து விட்டு இந்த வழக்கை கையில் எடுத்து தீவிரமாக காவல்துறை கண்காணிப்பாளர் விசாரித்து வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா அவர்கள் நாடு முழுவதும் நடக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டத்தை தூக்கி போட்டுவிட்டு இந்த முக்கியமான முத்த பிரச்சனையில் தலையிட்டு அதில் கருத்து சொல்லி நேரத்தை செலவிட்டுள்ளார். இவர்களுக்கெல்லாம் நாம் சொல்ல வேண்டிய பதிலை அந்த தொடரில் நடித்த நடிகை சுவரா பாஸ்கரே சொல்லிவிட்டார் கத்துவா என்ற கிராமத்தில் எட்டு வயது குழந்தையை கோவிலுக்குள் வைத்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை நடந்ததே அப்போது உங்கள் ரத்தம் கொதிக்க வில்லையா? உங்களுக்கு ஒரு படத்துக்காக கோவிலில் முத்தக் காட்சியை படமாக்கியதை எதிர்க்க எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார். விவசாய போராட்டத்துக்கும், தொழிலாளர் போராட்டத்திற்கும், சாதி சண்டைகளுக்கும், மத கலவரங்களுக்கும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், இல்லாத கடவுளையும் மதத்தையும் புண்ணாக்கி விட்டார்கள் என்று மருந்து போட கிளம்பிவிடுகிறார்கள் இவர்களின் அறியாமையை என்ன சொல்ல! இதே மதம் தான் சகமனிதனை சூத்திரன் என்கிறது, பஞ்சவன் என்கிறது, வேசி மகன் என்கிறது, பெண்களை அடிமைகள் என சொல்கிறது, ஒரு குறிப்பிட்ட சாதிக்கு (பார்ப்பனர்கள்) மட்டும் மற்ற அனைவரும் சேவை செய்ய வேண்டும் என்கிறது, கோவில் கருவறைக்குள் அதே மதத்தைச் சேர்ந்த மக்களை நுழைய அனுமதி மறுக்கிறது, நமது தாய்மொழியில் நம்மால் கடவுளை வழி பட முடியுமா? இதையெல்லாம் இந்துமத காவலர்கள் எதிர்க்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் மத காவலர்கள்...
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Leave Comments