‘நோய் எதிர்ப்பு சக்தி’ கசாயங்கள் விஷமாக மாறக்கூடும்

/files/1 2020-10-13 18:10:48.jpg

‘நோய் எதிர்ப்பு சக்தி’ கசாயங்கள் விஷமாக மாறக்கூடும்

  • 40
  • 0

தமிழில்: கோபி

கொரோனா பயத்தில் பரிசோதிக்காத, ‘நோய் எதிர்ப்பு சக்தியை’ அதிகரிக்கும் என்று வீட்டு வைத்தியங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது ஆபத்தில் போய் முடியக் கூடும். உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சிறிய விளக்கம் இதோ…..

கொரோனா பற்றிய பயம் எங்கும் நிறைந்துள்ள நிலையில், நம் வாட்ஸப் குழுவினர் வழக்கம்போல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வீட்டு வைத்திய குறிப்புகளையும் கசாயங்களையும் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதன் மாத்திரைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளன. விட்டமின் சி மற்றும் டி மாத்திரைகள் விரைவாக விற்று தீர்கின்றன. சமூக ஊடகமெங்கும் மஞ்சள் மாத்திரைகளின் விளம்பரம் உலா வருகின்றன.

மருத்துவமணைக்குச் செல்ல பயம், அதோடு இணையம் வழியாக மருத்துவரை சந்திப்பதில் உள்ள தயக்கம் எல்லாம் சேர்ந்து, தங்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டிலிருந்தே சுய மருத்துவம் செய்து கொள்கின்றனர். அஸ்வகந்தா, நெல்லிக்காய், மஞ்சள், முருங்கை, வல்லாரை  மற்றும் தேங்காய் நீர் ஆகியவை கலந்த ‘உடல் சக்தி பானம்’ கடந்த ஆறு மாதங்களாக நன்றாக விற்பனை ஆவதாக இந்தியாவைச் சேர்ந்த ஆரோக்கிய ஜூஸ் நிறுவனமொன்று கூறுகிறது. “கடந்த ஆறு மாதங்களில் நாங்கள் 300% வளர்ச்சி கண்டுள்ளோம்” என்கிறார் அந்த நிறுவனத்தின் ஊழியர்.

என்னுடைய நோயாளிக்கு நேற்று அறுவைசிகிச்சையின் போது நிறைய ரத்தகசிவு ஏற்பட்டது. காரணமும் தெரியவில்லை. கொரோனா வராமல் தடுக்க இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் பெருங்காயம் கலந்த மூலிகை கசாயத்தை தினமும் மூன்று வேளை தான் குடித்ததாக அறுவைசிகிச்சைக்குப் பிறகு என்னிடம் அவர் கூறினார்” என இயற்கை எதிர்ப்பு சக்தி பானங்கள் பற்றி கண் அறுவை சிகிச்சை மருத்துவர் ரகுராஜ் ஹெட்கே டிவிட்டரில் பதிவிட்டதும் பலரும் இதுபற்றி பேச ஆரம்பித்தனர். இதுவரை எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அதிகளவில் பயன்படுத்தும் போது, குறிப்பாக பல நோய்ப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

“சளியிலிருந்து பாதுகாக்க இரண்டு வாரங்களாக தினமும் மிளகு கசாயத்தைக் குடித்துக் கொண்டிருந்தேன். அதன்பின் வாயெல்லாம் எரியத் தொடங்கி என்னுடைய அல்சர் மறுபடியும் அதிகரிக்க தொடங்கிவிட்டது” எனக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த 20 வயதான அதீபன். இவர் கடந்த மாதம் வயிற்றுப் புண்ணால் மிகவும் பாதிப்படைந்தார்.

“கொரோனா வைரஸிலிருந்து தங்களை காக்கும் என்ற நம்பிக்கையில் விட்டமின் சி அல்லது ஜிங்க் மாத்திரைகளை தருமாறு என்னிடம் வரும் நோயாளிகள் கேட்கின்றனர். இதில் பெரும்பாலனவை ஆரோக்கியம் சார்ந்த அல்லது மூலிகை மருந்துகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால் இது இன்னும் ஒழுங்குப்படுத்தப்படவில்லை. யார் வேண்டுமானாலும் கடையில் விற்கலாம் என்ற நிலைமைதான் உள்ளது” என்கிறார் அப்பல்லோ மருத்துவமணையின் மூத்த மருத்துவர் டாக்டர் கிருஷ்னமூர்த்தி. 

“எங்களிடம் வரும் நோயாளிகளில் 15% இதுபோன்ற கசாயத்தை அளவுக்கு அதிகமாக ஏடுத்துக்கொண்டவர்கள். அவர்கள் வயிற்றுப் பிரச்சனைக்காக சிகிச்சை பெறுவார்கள். சில சமயங்களில் எண்டோஸ்கோபி சிகிச்சை செய்ய நேரிடும்” என சுய மருத்துவத்தின் விளைவுகளைச் சுட்டி காட்டுகிறார் விழுப்புரம் அரசு மருத்துவமணையின் மருத்துவர் மோகனவேல்.

நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய அக்கறை அதிகரித்திருந்தாலும், இதற்கான ‘மந்திர’ மாத்திரைகள் எதுவும் இல்லை என்பதை மருத்துவர்கள் நமக்கு நியாபகப்படுத்துகிறார்கள்.

“நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்பதே முதலில் தவறான கருத்து. உங்கள் உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்புதான் நோய் எதிர்ப்பு சக்தி. தனியாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நினைப்பை விடுத்து, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை நல்லபடியாக பேணுங்கள். குறிப்பாக உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி தானாக அதிகரிக்கும்” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த டயட் நிபுணர் மஞ்சரி சந்திரா. மேலும் அவர் கூறுகையில், உங்கள் சூழல், எந்த நிலையில் நீங்கள் உணவு உட்கொள்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்கிறார். “உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் போதுமான தண்னீர் குடிப்பது போன்றவையும் மற்ற முக்கியமான அம்சங்கள்” எனக் கூறுகிறார் மருத்துவர் கிருஷ்னமூர்த்தி.

“விட்டமின் சி மாத்திரைகள் அஸ்கார்பேட் வடிவத்தை விட அஸ்கார்பிக் அமில வடிவத்தில் நல்ல பலனை அளிக்கக் கூடியது. இதுவே அதிகமாக விற்பனையும் செய்யப்படுகிறது” என்கிறார் மஞ்சரி சந்திரா.

மற்றொரு பிரபல மாத்திரையான ஜிங்க், அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள காப்பர் அளவு குறைந்து சோம்பல், மயக்கம் ஏற்படும் என 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு கூறுகிறது.

அஸ்வகந்தா, ‘கபசுர குடிநீர்’ மற்றும் ‘நிலவேம்பு கசாயம்’ போன்ற ஆயுர்வேத, மூலிகை மருந்துகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

“மூலிகை கசாயத்திற்கோ இயற்கை வைத்தியத்திற்கோ நான் எதிரி அல்ல. ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும். உணவோடு சேர்த்து உண்பதால் (பருப்பில் மஞ்சள் கலப்பது) நமக்கு நல்லதே. ஆனால் பலர் காபி, டீ குடிப்பது போல் காலையும் மாலையும் ஒரு கப் கசாயத்தை குடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் மருத்துவர் மோகன்வேல்.

பிரபலமான வீட்டு வைத்தியங்களைப் பற்றியும் அதை எவ்வுளவு சாப்பிட வேண்டும், அதனால் என்ன ஏற்படும் போன்றவற்றையும் டயட் நிபுணர் ப்ரீத்தி ராஜ் கூறுகிறார்.1. மஞ்சள்


இதன் வைரஸ் தடுப்பு மற்றும் எதிர்ப்பு அழற்சிக்கு காரணம் இதிலுள்ள குர்குமின். பாக்கெட்டில் அடைத்த மஞ்சள் பொடியை விட தூய்மையான மஞ்சளே சிறந்தது. இதன் பலனை அதிகரிக்க மிளகோடு சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் சமைக்கும் போது இதன் மருத்துவ குணம் நன்றாக உடலில் சேரும்.

வயிறு உப்புசம் அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உடனே நிறுத்திவிடுங்கள். கசாயமாக குடித்தால் ஒரு நாளைக்கு மூன்று கிராமுக்கு (அரை டீ ஸ்பூன்) மேல் எடுத்துக் கொள்ளாதீர்கள்2. இஞ்சி


இஞ்சியின் உடலியல் செயலுக்கு காரணம் அதில் இருக்கும் ஜிஞ்சரால். தூய்மையான இஞ்சி குடல் பாக்டீரியாவை உறுதிப்படுத்தி செரிமானப் பாதையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.  உலர்ந்த இஞ்சி நுரையீரலில் உள்ள நச்சை நீக்குகிறது. நல்ல விளைவுகளுக்கு எலுமிச்சை கலந்த இஞ்சி சாரைப் பருகுங்கள்.

குடல் இரைப்பையில் அசௌகர்யம் ஏற்பட்டால் உடனே நிறுத்தி விடுங்கள். ஒரு நாளைக்கு 10 மில்லி (இரண்டு டீ ஸ்பூன்) இஞ்சிக் கசாயம் அல்லது நான்கு முதல் ஐந்து கிராமுக்கு மேல் (ஒரு டீ ஸ்பூன்) எடுத்துக் கொள்ளாதீர்கள்.3. கரு மிளகு


கரு மிளகில் உள்ள பைப்பரின், நுரையீரலில் உள்ள நச்சை நீக்கி நோய்த்தொற்றை எதிர்த்து போராட உதவும் டி-செல்லை உருவாக்குகிறது.  அதுமட்டுமல்லாமல் எதிர்ப்பு அழற்சியாக இருப்பதோடு நிணநீரணுவின் (நோயணுக்களை ஈர்த்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது) ஆரம்பகட்ட  நிலைகளுக்கு உதவுகிறது. குர்குமின் மற்றும் பீட்டா கரோடின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. அதனால் கேரட் சாலட் போன்ற விட்டமின் ஏ உணவுகளோடு நன்றாக சேர்கிறது.

குடல் இரைப்பைப் பிரச்சனை, வாயுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சல் இருந்தால் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு நாளைக்கு நான்கு கிராமுக்கும் குறைவாக மிளகை சாப்பிடுங்கள்.4. வெந்தயம்


வெந்தயம் அழற்சி நீக்கியாக இருக்கிறது. அதோடு ரத்த சக்கரை மற்றும் கொழுப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள் ஆல்கலாய்டுகள் மற்றும் கூமாரின் வைரஸ் தடுப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. முளைகட்டிய வெந்தயத்தில் நிறைய ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் இதை வெறும் வயிற்றில் உண்டால் அதிக பலன் உண்டு. இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகளில் சேர்ப்பதால் நல்ல பாக்டீரியாக்கள் குடலில் சேரும். வெந்தயக் குழம்பாகவும் உணவில் சேர்க்கலாம்.

குடலில் தொந்தரவு ஏற்பட்டால் இதை உண்ணாதீர்கள். ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிகமாக உண்டால் கல்லீரலில் நச்சுத்தன்மை உண்டாகி கல்லீரம் வீக்கம் அல்லது சிரோசிஸ் (ஈய்ரல் நோய்) ஏற்பட வாய்ப்புள்ளது.5. பூண்டு


பூண்டில் உள்ள அல்லிசின், டைசல்பேட் மற்றும் தியோசல்பேட் நுண்ணுயிரிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றியிடமிருந்து நுரையீரல் நச்சை நீக்குவதோடு வயதுவந்தவர்களுக்கு நல்ல செரிமானத்தைக் கொடுக்கிறது. மீனோடு சேர்த்து உண்டால் நல்லது. ஏனென்றால் மீனில் உள்ள ஓமேகா-3 அமிலம் அலிசின் கூறை அதிகரிக்கிறது. சைவப் பிரியர்கள் மீனிற்குப் பதில் ஆளி விதைகளோடு சேர்த்து உண்ணலாம்.

வாய் துர்நாற்றம், உப்புசம் அல்லது பலகீனமாக (குறைந்த ரத்த அழுத்த அறிகுறியாக இருக்கலாம்) உணர்ந்தால் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு நாளைக்கு ஏழு கிராமுக்கு மேல் அல்லது 300 கிராமுக்கு மேல் உலர்ந்த பூண்டு பொடியை உண்ணாதீர்கள்.6. சீரகம் மற்றும் மல்லி விதைகள்


இரண்டும் சேர்ந்து உண்பது நல்லது. சீரகத்தில் குடல் இயக்கத்திற்கு உதவி செய்யும் குமினால்டீஹைடு மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் உள்ளது. செலினியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் தாதுக்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.  சால்மன் மீன்களோடும் சீரகத்தை சேர்த்து உண்ணலாம். சைவப் பிரியர்கள் பயறு மற்றும் கத்தரிக்காயோடு உண்ணலாம்

உங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் கவனமாக இருக்கவும். ஒரு நாளைக்கு 600 மில்லி கிராம் சீரகம் மற்றும் ஒரு கிராம் (ஒருசில விதைகள்) மல்லி விதைக்கு மேல் எடுத்துக் கொள்ளாதீர்கள்.


Link source: https://www.thehindu.com/sci-tech/health/coronavirus-immunity-boosters-can-turn-harmful/article32793667.ece


Leave Comments

Comments (0)