பொது கழிவறையில் வைத்து தலித் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு..! வழக்கு பதிய காவல்துறையினர் மறுப்பு.

/files/fdh-2020-11-24-14:46:37.jpg

பொது கழிவறையில் வைத்து தலித் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு..! வழக்கு பதிய காவல்துறையினர் மறுப்பு.

  • 26
  • 0


-க. ஆனந்த்


உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பொது கழிவறையில், ஒரு தலித் பெண் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தினரும் புகார் தெரிவிக்க  

உள்ளூர் அலிகஞ்ச் காவல் நிலையத்திற்குச் சென்றபோது காவல்துறையினர் அவர்களின் புகாரை கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் காவல் நிலையத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண், குற்றம்சாட்டிய முன்னாள் கிராமத் தலைவர் ராஜீவ், அனில் மற்றும் ஆகாஷ் மூவரும் பாதிக்கப்பட்ட பெண்ணை கழிப்வறைக்கு இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.


குற்றவாளிகளின் அரசியல் பின்னனினால் காவல்துறையினர் புகாரை ஏற்க  மறுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் மங்கல் திவாஸ் அதிகாரிகளைச் சந்தித்து  புகார் தெரிவித்தார். அவர்களின் தலையீட்டை அடுத்து தற்போது விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

புலந்த்ஷாஹர் மாவட்டம்   அனுப்ஷஹர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 19 வயது இளம் பெண்ணின் தற்கொலை பின்னணியில் இந்த சம்பவம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Source: https://www.updatenews360.com/india/up-dalit-girl-gang-raped-inside-public-toilet-cops-refuse-fir-and-drive-victim-out-of-police-station-181120/

Leave Comments

Comments (0)