கேரளாவில் உடைக்கப்பட்ட தலைவர் சிலை ?

/files/periyar-2021-08-26-21:39:23.jpg

கேரளாவில் உடைக்கப்பட்ட தலைவர் சிலை ?

  • 24
  • 0

தவ.செல்வமணி


தலைவர்கள் என்கிற சொல்லுக்கான பொருளே எவ்வித பாகுபாடுகளும் இடமின்றி தன்னலம் பாராது,சமூகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு,பல்வேறு விமர்சனங்களுக்கும்,அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மக்களுக்காக வாழ்ந்து ,மக்களுக்காக எழுதி,மக்களுக்காக பேசி, மக்களுக்காக போராடினார்கள் அப்படிப்பட்டவர்கள் தான் தலைவர்கள் என்ற சொல்லுக்கு பாத்திரமானவர்கள்.


அப்படியான மக்கள் தலைவர்கள் தான் அம்பேத்கர்,பெரியார்,மார்க்ஸ் போன்றோர்,இன்று நாம் சமத்துவம்,சமூக நீதி,ஜனநாயகம் என்பது சட்ட பூர்வமாக நடைமுறைப்படுத்ததைப் பட்டுள்ளது என்றால் அதற்க்கு காரணமானவர்கள் இவர்களே.


இப்படிப்பட்ட தலைவர்களின் சிலையை உடைத்தும்,சிதைத்தும்,காவி நிறம் பூசியும்,செருப்பு மாலை அணிவித்தும் அவமானம் செய்வதாக எண்ணி தங்களையே அவமானப்படுத்தி கொள்கிறார்கள் சில சமூக விரோதிகள்.
இத்தகைய சம்பவங்கள் இந்தியா முழுவதும் அவ்வப்போது நடந்தேறிதான் வருகிறது,ஆனால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்படுகிறதா ! என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி அவர்கள் இதுவரை இப்படியான அவலங்களை எதிர்த்து குரல் எழுப்புவதே இல்லை.

குறிப்பாக சுதந்திர காற்றை ஒவ்வொரு சக மனிதனும் சுவாசிக்க வேண்டும் என்று எண்ணி தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர்களின் சிலையை பாதுகாப்பதற்காக இருப்பு கூண்டை கொண்டு அடைந்திருக்கிறார்கள்.


இப்படியான ஒரு மோசமான சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
பெண்கள் கல்வி கற்கிறார்கள்,வேலைக்கு செல்கிறார்கள்,தனக்கு விருப்பம் இல்லையெனில் தனது இணையரை விவாகரத்து செய்யும் உரிமையை பெற்றுள்ளனர்.


கர்ப்ப காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெற்றுள்ளனர்,ஓட்டு போடும் உரிமையை பெற்றுள்ளனர்,ஆண்களுக்கு நிகரான சம ஊதியம் பெறுகிறார்கள்.


தொழிலாளர்களின் வேலை நேரம் 16 மணி நேர வேளையில் இருந்து 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது,

தங்களுக்கென்று சங்கம் அமைத்துக் கொள்ளுதல் மற்றும் பல உரிமைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


SC,ST,BC,MBC உள்ளிட்ட சமுகத்தை சேர்ந்த அனைவருக்கும் இட ஒதுக்கீடு (இடப் பங்கீடு) வழங்கப்படுகிறது.


பார்ப்பனர் மட்டும் தான் கல்வி கற்க வேண்டும் என்கிற பிற்போக்கை மாற்றி அனைவர்க்கும் கல்வி கற்கலாம் என்கிற நிலை சட்ட பூர்வமாக இயற்றப்பட்டுள்ளது.


இத்தகைய சமத்துவ சட்டங்களை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சிலையை தான் சமூக விரோதிகள் உடைத்து தள்ளியுளார்கள்.

Leave Comments

Comments (0)